GPT மொழி மாதிரி (Generative Pre-trained Transformer – முன்பயிற்சி பெற்ற உருவாக்க அமைப்புமாற்றி) என்பது OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மொழி மாதிரியாகும். இது பல் உரைகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய தரவுத்தொகுப்பை மையமாகக் கொண்டு ஒரு அமைப்புமாற்றி (Transformer) நரம்பியல் வலைக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மனிதர் பயன்படுத்துவது போன்ற உரையை உருவாக்கப் பயிற்சி அளிக்கப்படும் திட்டமாகும்.
மொழி பெயர்ப்பு, கேள்வி பதில், மற்றும் உரைச் சுருக்கம், கட்டுரையாக்கம் போன்ற பல்வேறு இயற்கையான மொழிச் செயலாக்கப் பணிகளுக்கு இது நன்றாக செம்மைப்படுத்தப்படலாம். ஒரு சொற்றொடரின் தொடக்கம் அல்லது வாக்கியம் இடப்பட்டு வினவப்படும் போது GPTயால் ஒரு குறிப்பிட்ட பாணியில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உரையை உருவாக்க முடியும். GPT என்பது இன்று கிடைக்கக்கூடிய மிகவும் மேம்பட்ட மொழி மாதிரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் மொழிப் புரிதல் பணிகளில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.


