தேன் என்பது என்ன?

தாவரங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்றால், ஒரு மலரில் உள்ள மகரந்தம் (Pollen) இன்னொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதாவது மகரந்தச் சேர்க்கை (Pollination) நடைபெறவேண்டும். இது இரண்டு விதமாக நடைபெறும். ஒன்று தன்மகரந்தச் சேர்க்கை (Self-Pollination) மற்றொன்று அயல்மகரந்தச் சேர்க்கை (Cross-Pollination). எந்த மாதிரியாக இருந்தாலும், மகரந்தச் சேர்க்கை இரண்டு ஊடகங்கள் மூலம் நிகழ்கின்றது. ஒன்று உயிருள்ள ஊடகம் (Biotic), உயிரற்ற ஊடகம் (Abiotic). உயிரற்ற ஊடகம் என்பது மகரந்தத் தூள்கள் காற்றின் மூலமாகவோ அல்லது நீர் […]
மீன் தண்ணீர் அருந்துமா?

அது நன்னீர் மீனா அல்லது கடல்நீர் மீனா என்பதைப் பொறுத்தது. மேலும், மீன் தனது உடலில் உள்ள உப்பின் அடர்த்தியை வெளியே உள்ள நீரின் உப்போடு சமநிலை செய்திட தண்ணீர் அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் நிகழ்கின்றது. கடல்நீர் மீன் தண்ணீர் அருந்தும்.மேலும், அதற்குமுன் சவ்வூடு பரவல் என்றால் என்னவென்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம். செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து செறிவு கூடிய கரைசல் ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (Semi-permiable Membrane) ஒன்றின் மூலமாக […]
உயிர்காப்பு உடன்பிறப்பு

உயிர்காப்பு உடன்பிறப்பு (savior sibling அல்லது saviour sibling) என்பது சில பாரதூரமான நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை ஆகும். (1) ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் சம்பந்தமான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. அத்தகைய உயிரணுக்களோ அல்லது உறுப்புக்களோ மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறப்படல் அவசியமாகின்றது, இந்தத் தேவைக்கு உடன் பிறந்த நோயற்ற சகோதரர் ஒருவரே உதவ முடியும். (2) உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் […]
மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்

மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ? அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]
அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்)

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது.எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி […]
சாளர வரி

சாளர வரி (பலகணி வரி, ஜன்னல் வரி) என்பது ஒரு வீட்டில் உள்ள சாளர எண்ணிக்கைகளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு ஆகும். வரியைத் தவிர்ப்பதற்காக, சில வீடுகளில் சாளரம் செங்கல் கொண்டு அடைக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இது 1696 ஆம் ஆண்டிலும் ஸ்காட்லாந்தில் 1748 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1851 இல் இரண்டுநாடுகளிலும் அகற்றப்பட்டது. […]