நலநுண்ணுயிரிகள் (புரோபயாடிக்குகள்)

நலநுண்ணுயிரிகள் அல்லது புரோபயாடிக்குகள் (Probiotics) என்பவை உட்கொள்ளும்போது பெரும்பாலும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உயிர்வாழ் நுண்ணுயிரிகள் ஆகும். இவை தயிர் (யோகர்டு), அமிலப்பால், கெஃபிர் போன்ற பால் மூல உற்பத்திப்பொருள்களில் இருந்தும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. உயிருள்ள நுண்ணுயிரிகள், போதுமான அளவில் உட்கொள்ளப்படும்போது, அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு ஆரோக்கிய நன்மையை அளித்தால் அவை புரோபயாடிக்குகள் எனப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது. இயல்பாகவே மனிதர் உட்பட முள்ளந்தண்டுடைய விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களில் நன்மை தரும் […]