பெரியவர்களின் எலும்பு மச்சையில், குறிப்பாக இடுப்பு, தொடை எலும்பு, முதுகெலும்பு உடல்கள், மார்பெலும்பு ஆகியவற்றில் குருதியாக்கும் குருத்தணுக்கள் (ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் செல்கள்) காணப்படுகின்றன. அனைத்து இரத்த அணுக்களும் ப்ளூரிபோடென்ட் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்கள் (pluripotent hematopoietic stem cells – PHSC) இலிருந்து பெறப்படுகின்றன.
குருதியாக்கும் குருத்தணுக்களின் வளர்ச்சியும் மாற்றமும் இன்டர்லூகின்ஸ் (IL-3) மற்றும் காலனி தூண்டு காரணிகள் (எ.கா., CSF-G, CSF-GM) உள்ளிட்ட வளர்ச்சி தூண்டிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.