Me • Learning • Entertainment • News

  • ஈரல் புற்றுநோய் உயிரணுக்களின் (HepG2) பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வொன்று தெரியப்படுத்துகின்றது.(1) இதுமட்டுமல்லாது அக்குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படக்கூடிய உயிரணு-தன்மடிவையும் (apoptosis) தூண்டுகின்றது. இதனால் ஹெப்ஜீ2 வகை புற்றுநோய்க் கலங்கள் அழிகின்றன. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது. இதன் இந்தச் செயலுக்கு கறிவேப்பிலையில் உள்ள கிரினிம்பைன் (girinimbine) எனும் காரப்போலி (ஆல்க்கலாய்டு) காரணமாகும். ஆய்வாளர்கள் இதனை கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுகூடத்தில் வளர்ச்சியுறும் புற்றுநோய் உயிரணுக்களில் இதனைப் பரிசீலித்தனர். மனிதரில் இன்னமும் பரிசீலனை நடைபெறவில்லை.
  • ஆய்வுகூடத்தில் இசுத்ரேப்டோசோடோசின் (streptozotocin) எனும் வேதியற்பொருள் மூலம் இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் சேதப்படுத்தப்பட்ட எலிகள் இப்பரிசோதனைக்குப் பயன்பட்டன. இவற்றில் இதன் மூலம் செயற்கையாக நீரிழிவு உருவாகியது. வாய் மூலம் கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் முப்பது நாட்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. எலியில் குருதி குளுக்கோசு, வெல்லமேற்றப்பட்ட ஈமோகுளோபின், யூரியா, யூரிக் அமிலம், கிரியடினைன் போன்றவை குறைந்து கொள்வது அவதானிக்கப்பட்டது.  கறிவேப்பிலை இன்சுலின் சுரப்பதைத் தூண்டுகின்றது (2) என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியது.
  • ஒட்சிசன் எமக்குத் தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில் நிகழும் வேதியல் மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு வேதியல் பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சிஏற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை வழிவகுக்க உதவும். இவ்வாறு உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் பாதிப்படையாமல் இருக்க கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் துணை புரிகின்றது. இதன் மூலம் இதய நோய், புற்றுநோய்கள், வாத நோய்கள், நீரிழிவு போன்றன கட்டுப்படுத்தப்படலாம். இந்த நோய்கள் அனைத்திலும் உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் சேதமடைவது நிகழ்கின்றது. (3) இது தற்போதைக்கு ஏட்டளவில் மட்டுமே சாத்தியமாக உள்ளது, இதற்குரிய விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை.