Me • Learning • Entertainment • News

உடற்கூற்றியல் அறிமுகம்

உடற்கூற்றியல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பாகங்கள் பற்றிய ஆய்வு ஆகும். மனிதனின் உடல் அமைப்புப் பற்றிய ஆய்வு மனித உடற்கூற்றியல் ஆகும். சொற்பிறப்பியல்: உடற்கூற்றியல் (கிரேக்க anatomē, 'பிரித்தல்') மனித உடற்கூற்றியல் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது: விழி நோக்கு உடற்கூற்றியல் (Gross Anatomy)…

A-conceptual-art-representing-vegetative-vascular-dystonia-(VSD)
Start Course
0% Complete
Course Includes
  • 📘 2 Lessons
  • 📗 0 Topics
  • 📝 0 Quiz
  • 🎓 No Certificate

A-conceptual-art-representing-vegetative-vascular-dystonia-(VSD)

உடற்கூற்றியல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பாகங்கள் பற்றிய ஆய்வு ஆகும். மனிதனின் உடல் அமைப்புப் பற்றிய ஆய்வு மனித உடற்கூற்றியல் ஆகும்.

சொற்பிறப்பியல்: உடற்கூற்றியல் (கிரேக்க anatomē, ‘பிரித்தல்’)

மனித உடற்கூற்றியல் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:

  • விழி நோக்கு உடற்கூற்றியல் (Gross Anatomy)
  • நுண் நோக்கு உடற்கூற்றியல் அல்லது இழையவியல் (Microscopic Anatomy or Histology )
  • முளையவியல் (Embryology)

விழி நோக்கு உடற்கூற்றியல்

விழி நோக்கு உடற்கூற்றியலில் உடல் அமைப்புக்கள் வெற்றுக் கண்ணால் ஆய்வு செய்யப்படுகின்றது. இதைப் பின்வருமாறு கற்றுக்கொள்ளலாம்:

  • தொகுதி உடற்கூற்றியல் (எ.கா: வன்கூட்டுத் தொகுதி, இதயச் சுற்றோட்டத் தொகுதி)
  • பகுதி உடற்கூற்றியல் (எ.கா: வயிறு, நெஞ்சு, மேல் அவயவம், கீழ் அவயவம் )

நுண் நோக்கு உடற்கூற்றியல்

நுண் நோக்கு உடற்கூற்றியல் அல்லது இழையவியல் என்பது உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றின் உடற்கூற்றியலை நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தி ஆராயும் முறை ஆகும்.

முளையவியல்

கருக்கட்டலில் இருந்து குழந்தை பிறப்பதற்கு முன்னர் தாயின் கருப்பையுள் முளையம், முதிர்கரு போன்ற விருத்தி நிலைகளைப் பற்றி ஆராயும் முறை ஆகும்.

Course Content