GPT மொழி மாதிரி (GPT Language Model)

GPT மொழி மாதிரி (Generative Pre-trained Transformer – முன்பயிற்சி பெற்ற உருவாக்க அமைப்புமாற்றி) என்பது OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மொழி மாதிரியாகும். இது பல் உரைகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய தரவுத்தொகுப்பை மையமாகக் கொண்டு ஒரு அமைப்புமாற்றி (Transformer) நரம்பியல் வலைக் கட்டமைப்பைப் பயன்படுத்தி மனிதர் பயன்படுத்துவது போன்ற உரையை உருவாக்கப் பயிற்சி அளிக்கப்படும் திட்டமாகும். மொழி பெயர்ப்பு, கேள்வி பதில், மற்றும் உரைச் சுருக்கம், கட்டுரையாக்கம் போன்ற பல்வேறு இயற்கையான மொழிச் செயலாக்கப் […]
DALL-E and DALL-E 2 – வார்த்தையில் இருந்து படங்கள் உருவாக்கம்

DALL-E (டால் ஈ) என்பது OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆழமான கற்றல் அடிப்படையிலான பட உருவாக்க மாதிரியாகும். “வெள்ளை வேலி மற்றும் சிவப்பு கதவு கொண்ட இரண்டு அடுக்கு இளஞ்சிவப்பு வீடு” (“a two-story pink house with a white fence and a red door.” ) போன்ற இயற்கை மொழி உரை விளக்கங்களிலிருந்து படங்களை உருவாக்க இது பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த மாதிரியானது GPT மொழி மாதிரியைப் போன்ற அமைப்புமாற்றி அடிப்படையிலான கட்டமைப்பைப் […]
அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்)

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது.எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி […]
முகமாற்று அறுவைச்சிகிச்சை

முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார். [1] முகமாற்றுப் பொருத்தால் பலன் […]