சாளர வரி

சாளர வரி (பலகணி வரி, ஜன்னல் வரி) என்பது ஒரு வீட்டில் உள்ள சாளர எண்ணிக்கைகளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு ஆகும். வரியைத் தவிர்ப்பதற்காக, சில வீடுகளில் சாளரம் செங்கல் கொண்டு அடைக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இது 1696 ஆம் ஆண்டிலும் ஸ்காட்லாந்தில் 1748 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1851 இல் இரண்டுநாடுகளிலும் அகற்றப்பட்டது. […]