மீன் தண்ணீர் அருந்துமா?

அது நன்னீர் மீனா அல்லது கடல்நீர் மீனா என்பதைப் பொறுத்தது. மேலும், மீன் தனது உடலில் உள்ள உப்பின் அடர்த்தியை வெளியே உள்ள நீரின் உப்போடு சமநிலை செய்திட தண்ணீர் அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் நிகழ்கின்றது. கடல்நீர் மீன் தண்ணீர் அருந்தும்.மேலும், அதற்குமுன் சவ்வூடு பரவல் என்றால் என்னவென்று ஒரு சிறு பார்வை பார்த்து விடுவோம். செறிவு குறைந்த கரைசல் ஒன்றிலிருந்து செறிவு கூடிய கரைசல் ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (Semi-permiable Membrane) ஒன்றின் மூலமாக […]
தேன் என்பது என்ன?

தாவரங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டுமென்றால், ஒரு மலரில் உள்ள மகரந்தம் (Pollen) இன்னொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். அதாவது மகரந்தச் சேர்க்கை (Pollination) நடைபெறவேண்டும். இது இரண்டு விதமாக நடைபெறும். ஒன்று தன்மகரந்தச் சேர்க்கை (Self-Pollination) மற்றொன்று அயல்மகரந்தச் சேர்க்கை (Cross-Pollination). எந்த மாதிரியாக இருந்தாலும், மகரந்தச் சேர்க்கை இரண்டு ஊடகங்கள் மூலம் நிகழ்கின்றது. ஒன்று உயிருள்ள ஊடகம் (Biotic), உயிரற்ற ஊடகம் (Abiotic). உயிரற்ற ஊடகம் என்பது மகரந்தத் தூள்கள் காற்றின் மூலமாகவோ அல்லது நீர் […]
மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்

மழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா ? அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]