Me • Learning • Entertainment • News

அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்)

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது.எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம்.  நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி […]

சாளர வரி

a-building-with-a-mix-of-real-windows-and-what-appear-to-be-bricked-up-windows

சாளர வரி (பலகணி வரி, ஜன்னல் வரி) என்பது ஒரு வீட்டில் உள்ள சாளர எண்ணிக்கைகளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு ஆகும். வரியைத் தவிர்ப்பதற்காக, சில வீடுகளில் சாளரம் செங்கல் கொண்டு அடைக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இது 1696 ஆம் ஆண்டிலும் ஸ்காட்லாந்தில் 1748 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1851 இல் இரண்டுநாடுகளிலும் அகற்றப்பட்டது. […]

நலநுண்ணுயிரிகள் (புரோபயாடிக்குகள்)

நலநுண்ணுயிரிகள்

நலநுண்ணுயிரிகள் அல்லது புரோபயாடிக்குகள் (Probiotics) என்பவை  உட்கொள்ளும்போது பெரும்பாலும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உயிர்வாழ் நுண்ணுயிரிகள் ஆகும். இவை தயிர் (யோகர்டு), அமிலப்பால், கெஃபிர் போன்ற பால் மூல உற்பத்திப்பொருள்களில் இருந்தும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. உயிருள்ள நுண்ணுயிரிகள், போதுமான அளவில் உட்கொள்ளப்படும்போது, ​​ அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு ஆரோக்கிய நன்மையை அளித்தால் அவை புரோபயாடிக்குகள் எனப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது. இயல்பாகவே மனிதர் உட்பட முள்ளந்தண்டுடைய விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களில் நன்மை தரும் […]

எளிய தமிழில் Robotics

எளிய தமிழில் Robotics

எளிய தமிழில் Robotics – கணினி அறிவியல் – இரா. அசோகன்நூல் : எளிய தமிழில் Robotics ஆசிரியர் : இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரிமின்னஞ்சல் : sraji.me@gmail.com வெளியீடு : FreeTamilEbooks.com (https://freetamilebooks.com/ebooks/robotics/) உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

இராமானுசனின் மாயச் சதுரம்

கணித மேதை இராமானுசனின் மாயச் சதுரத்தின் சூத்திரம், உங்களது பிறந்த நாளை வைத்து செய்து பாருங்கள்.. இங்கு நாம் எடுக்க இருக்கும் பிறந்த நாள்: 01.12.1922 முதலில் இவற்றின் கூட்டுத்தொகையைக் கணிக்கவேண்டும். D = பிறந்த திகதி M = பிறந்த மாதம் X= பிறந்த ஆண்டின் முதல் இரு இலக்கங்கள் Y = பிறந்த ஆண்டின் கடைசி இரு இலக்கங்கள் D + M + X + Y = 01 + 12 […]

முகமாற்று அறுவைச்சிகிச்சை

முகமாற்று அறுவைச்சிகிச்சை

முகமாற்றுப் பொருத்து அல்லது முகமாற்று அறுவைச்சிகிச்சை என்றால் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒருவரது முகத்தை வேறோருவருடைய முகம் கொண்டு மாற்றம் செய்யும் அறுவை மருத்துவம் ஆகும். ஒருவரது முகம் விபத்தில் வெட்டப்பட்டு துண்டாகிய பின்னர் அவரது முகத்தையே அவருக்குப் பொருத்துதல் முகமீளப் பொருத்து எனப்படும். இச்சிகிச்சை தோலை மட்டும் எடுத்துப் பொருத்துவதன்று; தசைகள், என்புகள் போன்றவை கூட இச்சிகிச்சையில் மாற்றீடு செய்யப்படலாம். மூளை இறந்து இறக்கும் தருவாயில் உள்ள நபரே முகத்தை வழங்குபவராக உள்ளார். [1] முகமாற்றுப் பொருத்தால் பலன் […]

பிளாண்டர் புலத்தில்

In Flanders fields the poppies blow

பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே ஒரு போர் வீரர், மருத்துவர், கவிஞர். முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் […]