Me • Learning • Entertainment • News

பரசிட்டமோல் நச்சுமை

வலிநீக்கி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு பரசிட்டமோல் நச்சுமை எனப்படும். உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல், பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) […]

கவி காளமேகம் பாடல்கள்

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். காப்பு 1 ஏர்ஆனைக் காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்தபோர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் – வாராதபுத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்;சக்திவரும்; சித்திவரும் தான். கலைமகள் வணக்கம்(திருமலைராயன் அவையில் அரியணை இரண்டு முழம் வளர்ந்துஇடம் கொடுத்தபோது பாடியது) 2 வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டுவெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளைஅரியா சனத்தில் அரசரேடு என்னைச்சரியா சனம்வைத்த தாய். .. நிந்தாத் துதிகள்அ. இகழ்வது போல் புகழ்தல்(காஞ்சி வரதர் கருட உற்சவத்தைச் […]

சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும்

KSatchithananthan

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லைமன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்தமாரன் அழகெனக்கு வேண்டியதில்லை. கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்க்கம்பன் கவியெனக்கு வேணுமேயடாதின்னத் தமிழெனக்கு வேணுமேயடா – தின்றுசெத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா. உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒருஉற்றார் உறவினரும் வேண்டியதில்லைமண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை – இளமாதர் இதழமுதும் வேண்டியதில்லை. பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் – உயிர்பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் – அங்குக்காயும் கிழங்குகளும் […]

நம் மொழியுரிமைகள்

நம் மொழியுரிமைகள்

தனிநாயகம் அடிகள் (வண. சேவியர் தனிநாயகம்) 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார்.  முதலாவது உலகத் தமிழ் மாநாடு ஏப்ரல் 1966 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்நூலில் தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுக்க தமிழர் ஆக்கவேண்டிய பணிகள் பற்றி விவரிக்கின்றார்.  

நீ வந்தால்

kavithai

நீ வந்தால் என்னிடத்தில் ஒரு நடுக்கம், உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட முடிவதில்லை, என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய், மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய், மானமுள்ள மனிதனா நான் என்று என்னைக் கேட்க வைக்கின்றாய், என்னுடன் நானே போராடும் சம்பவம் உன்னால்தானே அரங்கேறியது, நீ வந்தால் என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம், கண்களில் ஏதோ மயக்கம், வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை, தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே, உன்னால் தானே ஊரவர் […]

மூளைப் பதியங்கள் கற்பனையான கையெழுத்தை ஒரு திரையில் உரையாக மாற்றுகின்றன

systemDiagram

மூளை கணினி இடைமுகம் மனக்கையெழுத்தை திரையில் உரையாக மாற்றுகிறது பக்கவாதம் காரணமாக கழுத்தில் இருந்து முடங்கிய ஒருவர் மூளைமூலம் உரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டார். ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக, கடிதங்களை எழுதுவதோடு தொடர்புடைய நரம்பியல் சமிக்ஞைகளை குறிமுறை நீக்கம் செய்துள்ளனர், பின்னர் இந்த கடிதங்களின் தட்டச்சு செய்யப்பட்ட பதிப்புகளை நிகழ்நேரத்தில் காண்பித்தனர். தங்கள் கண்டுபிடிப்பு ஒரு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பு கொள்ள உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். முடங்கிப்போன மனிதனின் மூளையில் உள்ள மின்முனைகள் அவரது […]

வெந்து தணிந்தது காடு (அக்கினி குஞ்சொன்று கண்டேன்)

வெந்து தணிந்தது காடு

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! வெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!வெட்டி அடிக்குது மின்னல்கடல் […]

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

VIVEKANANDAR

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். வாசிக்க மேலே அழுத்தவும்.. இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல […]

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்

முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;