Me • Learning • Entertainment • News

வாழை மருத்துவம்

வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana)…

Start Course
0% Complete
Course Includes
  • 📘 4 Lessons
  • 📗 0 Topics
  • 📝 0 Quiz
  • 🎓 No Certificate

வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும்.

பழைய உயிரியற் பெயர்களான மியுசா சாப்பியென்டம், மியுசா பராடிசியகா ( Musa sapientum and Musa paradisiaca ) என்பன தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை.வாழையின் எல்லாப் பகுதிகளுமே ( இலை, பூ, காய், பழம், தண்டு) பல வழிகளில் பயன்படுகிறது. வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், தனிமங்கள், சேர்மங்கள் மருத்துவ உலகில் முக்கியமானவையாகும். மலிவானதும் மிகையாக சத்துக்கள் செறிந்ததுமான வாழைப்பழத்தை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுவது சிறந்தது.

Course Content