Me • Learning • Entertainment • News

முல்லாவின் கதைகள்

முல்லா நஸ்ருத்தீன் குவாஜா (1208-1285) என்பது அவருடைய முழுப்பெயர். இதில் முல்லா என்பது அறிஞர் – கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும் ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கிசெஹிர் அவருடைய பிறந்த மாகாணம் எனக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நஸ்ருத்தீன் குவாஜா என்னும் விழா இவரின் பெயரால் சிறப்பிக்கப்படுகின்றது.

இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.

முல்லாவின் கதைகள்